×

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

சென்னை: அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை அந்த கட்சியில் இருந்து நீக்கி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகோயோர் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் நீக்குவதாக குறிப்பிட்டிருந்தனர்.

இது தமது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளது. எனவே அதிமுகவை நிர்வகிக்கின்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி அலீசியா முன்பாக விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது நபராக ஓ பன்னீர்செல்வம் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இருவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Tags : OBS ,EPS ,Pukahendi ,AIADMK , admk
× RELATED சொல்லிட்டாங்க…