17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் போக்சோவில் கைது

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, புரசைவாக்கத்தில் உள்ள  துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு திருவிக நகர் 6வது தெருவை சேர்ந்த தினேஷ் குமார் (22) என்பவர் சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அங்கிருந்த தினேஷ்குமாரை  கைது செய்து விசாரித்தபோது, சிறுமியும் தினேஷ்குமாரும் காதலித்து வந்துள்ளனர்.  இருவரும் 2 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து உறவினர் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>