தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை!: தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்..!!

டெல்லி: தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் எழுத்துபூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு இத்தகைய பதிலை கொடுத்திருக்கிறது. ஐ.ஜே.கே. கட்சியின் தலைவராகவும், பெரம்பலூர் மக்களவை தொகுதியின் எம்.பி.யாகவும் இருக்கின்ற பாரிவேந்தர் மக்களவையில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதில், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டை பிரிப்பதற்கான சூழல் இருந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா? அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என்று தகவல் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரையில் கொங்குமண்டலம் என்று தனியாக பிரிக்க போவதாக தகவல்கள் தெரிவித்துக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் பாரிவேந்தரின் கேள்விக்கு ஒன்றிய அரசு இத்தகைய பதிலை அளித்திருக்கிறது. ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனின் சுய விவரகுறிப்பில் கொண்டுநாடு என்ற வார்த்தை இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்தது. ஒன்றிய அரசின் விளக்கம் மூலம் பாஜகவில் ஒரு தரப்பினர் கிளப்பிய கொங்குநாடு சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories:

>