வட மாநிலங்களில் தொடர் மழையால் கடும் பாதிப்பு: ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின

கான்பூர்: உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை நீடிப்பதால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாரான் மாவட்டம், சிப்பாபராட் முழுவதும் சூழ்ந்த வெள்ளப்பெருக்கால் அங்குள்ள காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. காவல் நிலையத்தில் 3 அடி உயரத்திற்கு கணினி அறை, பதிவு அறை, விசாரணை கைதிகளை அடைக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானின் பல இடங்களில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதேபோல் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் கனமழை தொடர்வதால் கான்பூரில் பாண்டு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாண்டு நதியை ஒட்டிய கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஒரு வரமாக நீடிக்கும் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சிவ்புரி என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய 10 பேரை விமானப்படை ஹெலிகாப்டர், பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டுவந்தனர்.

இதனிடையே மேகவெடிப்பால் பெருமழை கொட்டிய ஜம்மு காஷ்மீரில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதிப்புகள் குறித்து ட்ரோன் கேமராக்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளன.

Related Stories:

>