நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..!!

டெல்லி: நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. cbseresults.nic.in, cbse.gov.in இணையத்தளத்தில் மாணவ, மாணவிகள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அல்லது Digilocker, Umang செயலி மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிடு செய்யப்பட்டு அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் சில மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கக்கூடிய முறை என்பது திருப்தி கரமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அது தொடர்பாக முறையிடலாம்.

மேலும், இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு  அவர்கள் விரும்பினால் 12ம் வகுப்பு எழுத்து  தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. ஒரேநேரத்தில் அனைவரும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முயற்சித்தார்கள் எனில் சர்வர் பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே மாணவர்கள் பதற்றமின்றி தங்களுடைய பள்ளிகளுக்கு சென்று தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: