வீட்டை உடைத்து நகை கொள்ளை

ஆவடி: ஆவடி காமராஜர் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் நோன்புமணி(53). இவரது கணவர் குணசேகரன் இறந்து விட்டார். மூத்த மகள் குமுதா, தர்மபுரியிலும், இளைய மகள் மலர்விழி குன்றத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நோன்புமணி வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.  இந்நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவள்ளூருக்கு சென்றுவிட்டார். நேற்று மாலை வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>