×

4 நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று குறைவு: தமிழகத்தில் ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா..! சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் ஒரேநாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 23 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். 2,068 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 20,385 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணைநோய்கள் ஏதுமில்லாதவர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.12 வயதிற்குட்பட்ட 109 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 26 மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை இல்லை. சென்னையை பொறுத்தவரை மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Department , Today's decline after 4 days increase: Corona for 1,957 people in one day in Tamil Nadu ..! Health Department Report
× RELATED டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள்...