தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர் கலைஞர்: சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழில் பேச்சு

சென்னை: இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் உரையாற்றினார். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் எனவும் குடியரசு தலைவர் பேசினார். நம் நாடு இந்த வருடம் பல துறைகளில் சாதணை படைத்துள்ளது என கூறினார். தமிழக சட்டப்பேரவையில்  முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் உருப்படம் திறந்துவைத்த பின்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம்.

கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதிலும் பெருமை அடைகிறேன். சட்டப்பேரவையில் இதுவரை இருந்த அனைத்து சபாநாயகர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுவரை இருந்த அனைத்து  முதல்வர்களும் சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றி உள்ளனர். தமிழக சட்டப்பேரவை பல்வேறு சிறப்பு மிக்க வரலாற்றுகளை கொண்டது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கருணாநிதி. நம்நாடு இந்த வருடம் பல துறைகளில் சாதனைகளை படைத்துள்ளது.

மக்களாட்சி இந்த சட்டப்பேரவையின் மூலம் உருவக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையை உருவாக்க நீதிக்கட்சியை சேர்ந்தவர்கள் முயற்சி எடுத்தார்கள். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இந்த சட்டமன்றம் உதவியாக இருந்துள்ளது. அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி. இந்த அவையில் இன்று கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நீண்ட காலம் தனது பங்களிப்பை அளித்தவர் கருணாநிதி. மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி.  திரைப்படம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் கருணாநிதி” என்றார்.

Related Stories: