கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி!: கோவிட் பரவலை கட்டுப்படுத்த கோவையில் புதிய கட்டுப்பாடுகள்..!!

கோவை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சோதனை சாவடிகளில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கோவையில் கடந்த 5 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. அதன் ஒருபகுதியாக கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய வாளையாறு உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்கள் முடிவுகள் வரும் வரை வெளியே செல்ல அனுமதியில்லை. அவர்களை சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். அத்யாவசிய தேவை இன்றி கோவை வருவோரின் முகவரி விவரங்களையும் வருவாய்த்துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories:

>