சீனாவில் மீண்டும் தீவிரமடையும் தொற்று... உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்

பெய்ஜிங்: உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் பரவலை அடுத்து சீனாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறி வரும் வரும் நிலையில் 20 நகரங்களில் டெல்டா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பரிசோதனை நடத்த சீனா முடிவு செய்துள்ளது. 12 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உகான் மாகாணத்தின் ஜூஜென் நகரில் 3 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகள் வருவதற்கு ஏற்கனவே சீனத் தலைநகரான பெய்ஜிங் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Related Stories:

>