இந்தியாவுக்கு 3வது பதக்கம் பெற்று தருவாரா கமல்பிரீத் கவுர்? தகுதி சுற்றில் அசத்தியதால் எதிர்பார்ப்பு

டோக்கியோ : ஒலிம்பிக்கில் இன்று  மாலை 4.30 மணிக்கு வட்டு எறிதலில் இறுதி போட்டி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் கமல்பிரீத் கவுர் களம் இறங்குகிறார். பஞ்சாபை சேர்ந்த 25 வயதான கமல்பிரீத் கவுர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பையின்போது 65.06 மீட்டர் தூரம் வீசி தேசிய சாதனைப்படைத்து ஒலிம்பிக்கிற்குள் நுழைந்தார். அத்தோடு இந்தியன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் 65.59 மீட்டர் தூரம் வீசி பிரமிக்கவைத்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் கமல்பிரீத் மீது எதிர்பார்ப்பு இருந்தது.

அதன்படியே தகுதிச்சுற்றில் 64.00 மீட்டர் தூரம் வீசி தகுதிச்சுற்றில் இரண்டாம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி தகுதி பெற்றார். ஒலிம்பிக் வட்டு எறிதலில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இரண்டாவது இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர். இதற்கு முன் 2012 ஒலிம்பிக்கில் கிருஷ்ணா பூனியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். இறுதிப் போட்டியில் அவரால் 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.  இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் கவுர் உள்பட மொத்தம் 12 வீராங்கனைகள் மோதுகிறார்கள். இதில் சவாலை எதிர்கொண்டு இந்தியாவுக்கு 3வது பதக்கத்தை கவுர் பெற்றுத்தருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories: