டோக்கியோ ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்டம்: அரையிறுதி வாய்ப்பை இழந்தார் டூட்டி சந்த்..! தகுதி சுற்றில் 7ம் இடத்தை பிடித்தார்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடந்த மகளிர் 200 மீ ஓட்டம் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த், 7ம் இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். டோக்கியோவில் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இன்று காலை மகளிர் 200 மீட்டர்  ஓட்டத்திற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடந்தன. இதில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் பங்கேற்றார். 200 மீ ஓட்டத்தில் தேசிய அளவில் சாதனை படைத்த டூட்டி சந்த், இந்த தகுதி சுற்றில் 2 வினாடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி, 7ம் இடத்தையே பிடித்தார்.

இப்போட்டியில் நமீபியாவின் கிறிஸ்ட்டின் எம்போமா, 200 மீ தூரத்தை 22.11 வினாடிகளில் கடந்து, முதல் இடத்தை பிடித்தார். அமெரிக்க வீராங்கனை கேபிரியேல் தாமஸ், 22.20 வினாடிகளில் இந்த தூரத்தை கடந்து 2ம் இடத்தை பிடித்தார். நைஜர் வீராங்கனை அமினாட்டா செய்னி 22.72 வினாடிகளில் இந்த தூரத்தை கடந்து 3ம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவர்கள் 3 பேரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்திய வீராங்கனை டூட்டி சந்த், இப்போட்டியில் 200 மீ தூரத்தை 23.85 வினாடிகளில் கடந்து, 7ம் இடத்தையே பிடித்தார். இதையடுத்து 200 மீ மகளிர் ஓட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து டூட்டி சந்த் வெளியேறினார்.

Related Stories:

>