டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக கடந்த 23-ம் தேதி தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சாய்த்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார் குர்ஜித் கவுர். இந்திய அணியின் கோல் கீப்பர் சவீதா புனியா பெனால்டி கார்னர்களை தடுத்து அபாரம். ஒலிம்பிக்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெறுவது இதுவே முதல் முறை. அரையிறுதிக்கு முதல்முறையாக முன்னேறி இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாறு படைத்தது. அரையிறுதியில் அர்ஜெண்டினாவை இந்திய அணி எதிர்கொள்கிறது. 

Related Stories: