காவல்துறையினருக்கு வார விடுப்பு: அன்புமணி வரவேற்பு

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  தமிழக காவல்துறைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காவலர்களுக்கு வார விடுமுறை என்பது பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கையாகும். காவலர்களுக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதையும் நிறைவேற்றி காவலர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதல்வரும், காவல்துறை தலைமை இயக்குனரும் முன்வர வேண்டும்.

Related Stories:

>