வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்

சென்னை: தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக வாலாஜாவில் 50மிமீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் 40 மிமீ, திருக்கழுக்குன்றம், திருவாலங்காடு 30மிமீ மழை பெய்துள்ளது. சென்னை, சோழவரம், செம்பரம்பாக்கம், அண்ணா பல்கலைக் கழகம், எண்ணூர், கேளம்பாக்கம் பகுதிகளில் 20மிமீ மழை பெய்துள்ளது.  இதையடுத்து, இன்று முதல் 5ம் தேதி வரை மழை நீடிக்கும்.  இன்று நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.

நாளை மு தல் 5ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென் காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொருத்தவரையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Related Stories: