பி.வி.சிந்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னைஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: தனது சிறப்பான ஆட்டத்தால் பேட்மிண்டனில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பி.வி. சிந்து எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். நாட்டிற்காக மேலும் பல பதக்கங்களை அவர் வருங்காலத்தில் வெல்ல வாழ்த்துகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

ராமதாஸ் (நிறுவனர், பாமக):

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தின் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள். தனிநபர் பிரிவில் தொடர்ந்து இரு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்து. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை முன்னேற்றுவதற்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்.

டிடிவி. தினகரன் (பொதுச் செயலாளர், அமமுக): வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பாராட்டுக்கள். அவரது விளையாட்டுப் பயணம் இந்தியாவிற்கு புகழ் சேர்க்கும் வகையில் தொடர வாழ்த்துகிறேன்.

Related Stories:

>