சென்னையில் ஆக.9ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னையில் பொது இடங்களில், திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த வரும் 9ம் தேதி வரை தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை: வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறை அரசு ஆணையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணி வரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளிமின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளியில் கூடுதல், கூட்டங்கள் நடத்துதலை தடை செய்தல் அவசியம். எனவே, சென்னை காவல் சட்டம் 1888 பிரிவு 41 உட்பிரிவு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொதுஇடங்களில் திறந்த வெளியில் கூடுவது, கூட்டங்கள் நடத்துவது ஆகஸ்ட் 9ம் தேதி பிற்பகல் 3 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.

Related Stories:

>