பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வழிப்பறி ஆசாமிகள்: சமூக வலைதளங்களில் பரவும் சிசிடிவி காட்சி

பூந்தமல்லி: பூந்தமல்லியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர். பூந்தமல்லி கந்தசாமி நகரை சேர்ந்தவர் சரண்யா(29), நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அங்கும், இங்கும் நோட்டமிட்டபடி சரண்யாவின் அருகில் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச்செயினை பறிக்க முயன்றனர். அவர்களுடன் சரண்யா போராடினார். செயினை பறிக்க முடியாததால் அவரை கீழே தள்ளிவிட்டு 2 பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories:

>