ஆண்கள் டென்னிஸ் அலெக்சாண்டர் சாம்பியன்

ஒலிம்பிக் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (24 வயது) தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி அணி (ஆர்.ஓ.சி) வீரர் கரென் கச்சனோவுடன் நேற்று மோதிய அலெக்சாண்டர் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கச்சனோவ் (25 வயது) வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா - சினியகோவா ஜோடி 7-5, 6-1 என்ற நேர் செட்களில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் - விக்டோரியா கொலுபிக் ஜோடியை வீழ்த்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. கலப்பு இரட்டையர் பிரிவில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி அணியின் எலினா வெஸ்னினா - அஸ்லன் கரட்சேவ் மற்றும் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா - ஆந்த்ரே ருப்ல்வேவ் ஜோடிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அனஸ்டேசியா - ருப்லேவ் இணை 6-3, 6-7 (5-7), 13-11 என்ற செட் கணக்கில் 1 மணி, 53 நிமிடம் போராடி வென்று முதலிடம் பிடித்தது. வெஸ்னினா - கட்சேவ் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

Related Stories: