×

சொல்லிட்டாங்க...

* உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலிலும் பாஜ தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தோல்வியை சந்திக்க எதிர்கட்சி தலைவர்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா

* மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசு, தமிழக பாஜ மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு தடை விதித்தால் அதைப்பற்றி நாம் கண்டு கொள்ளக்கூடாது. - கர்நாடக காங். தலைவர் டிகே சிவகுமார்

* மேகதாதுவில் கர்நாடகாவில் நிச்சயம் அணைகட்ட முடியாது. இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளுக்காக பாஜ குரல் கொடுக்கும். - முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

* தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர் 10 ஆயிரம் பேரை திரட்டி உண்ணாவிரதம் இருப்பேன் என கூறுகிறார். பாஜகவின் இரட்டை வேடம் மக்களுக்கு நன்றாக தெரியும். - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன்

Tags : Told...
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...