×

மியான்மரில் 2023-ல் நாடாளுமன்ற தேர்தல்

நேபிட்டா: மியான்மரில், கடந்த பிப்ரவரியில் புரட்சி மூலம் ராணுவம்  ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது. ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய 1000க்கும் மேற்பட்டோரை ராணுவம் கொன்றுள்ளது. இந்நிலையில்,  ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லாய்ங் நேற்று தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ‘‘அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளோம். அந்த சூழல் ஏற்பட்டதும், 2023ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறும்,’’ என்றார். புதிய தேர்தல் ஆணையத்தை இவர் ஏற்கனவே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Myanmar , Parliamentary elections in 2023 in Myanmar
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்