×

மயிலாப்பூர் டாஸ்மாக் அருகே மீனவர் வெட்டிக்கொலை: இருவர் கைது

சென்னை: நொச்சிகுப்பத்தை சேர்ந்த மீனவர் சரவணன் (34), நேற்று மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்டாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், தப்பியோடிய கும்பலை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று, இருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் நொச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், ஷாம் என்பதும், முன்விரோத தகராறில் சரவணனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். தப்பி யோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Mylapore Tasmak , Mylapore, Tasmak, fisherman murdered, arrested
× RELATED பணியாளர்களுக்கு இருசக்கர வாகனம்