×

ரயில் பெட்டியில் துளையிட்டு ரூ.15 லட்சம் புடவைகளை திருடிய வாலிபர் கைது

சென்னை: அகமதாபாத்தில் இருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. இதன் சரக்கு பெட்டியை ரயில்வே ஊழியர்கள் திறந்தபோது, ரயில் மேற்கூரை துளையிடப்பட்டு ரூ.15 லட்சம் பட்டுப்புடவைகள் திருடுபோனது தெரியவந்தது.
ரயில்வே போலீசார் விசாரணையில், நாக்பூரை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்து. இதையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த வாரம் நாக்பூருக்கு சென்று, மொனின்புரா பகுதியில் முகமது ஜாசிம் (32) என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முகமது குட்டு, முகமது இம்தியாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Train box, sari, stolen youth, arrested
× RELATED கண்ணூர் ஏர்போர்ட்டில் பரபரப்பு; ரூ15...