வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம், கிரெடிட் கார்டு எண்ணை பெற்று பணம் பறித்த 2 பேர் டெல்லியில் கைது: முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோவிந்தராஜை, கடந்த 4ம் தேதி செல்போனில் தொடர்புகொண்ட நபர், ‘எஸ்பிஐ வங்கியிலிருந்து பேசுகிறேன். உங்களது கிரெடிட் கார்டுக்கு பரிசு பொருள் வந்துள்ளது. கார்டின் விவரங்களை கூறினால் உடனடியாக பரிசு பொருள் கிடைக்கும்,’ என கூறியுள்ளார். அதை நம்பிய அவர் தனது எஸ்பிஐ கிரெடிட் கார்டின் ரகசிய குறியீட்டு  எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது கிரெடிட் கார்டு  கணக்கிலிருந்து ரூ.1,08,740 அபேஸ் செய்யப்பட்டது. இதுபற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில்,  டெல்லியை சேர்ந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, டெல்லியில் முகாமிட்டு, மோசடி கும்பலுக்கு  உதவியாக இருந்த டெல்லி ஜோரிபூரை சேர்ந்த அதுல்குமார் மற்றும் காசியாபாத்தை  சேர்ந்த குணால் ஆகியோரை கடந்த 30ம் தேதி கைது செய்து ரூ.1 லட்சத்தை  பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் இதுபோல் பலரிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. பின்னர், அவர்களை நேற்று எழும்பூர் சிசிபி நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி  வருகின்றனர்.

Related Stories: