தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா: சென்னை, கோவையில் பாதிப்பு குறைவு

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை, கோவையில் பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,156 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 25,06,961 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,524. அதேசமயம், சென்னையில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

இதையடுத்து மொத்தம் 34,102 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் 204 பேர், செங்கல்பட்டு 122 பேர், கோவை 246 பேர், ஈரோடு 165 பேர், தஞ்சாவூர் 124 பேர் என 5 மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவையில் நேற்றைய பாதிப்பை விட இன்று குறைந்துள்ளது. மேலும் 33 மாவட்டங்களில் 100 க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>