இந்தியாவுக்கு 2வது பதக்கம்: ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தார் பி.வி.சிந்து..! பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்றார்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கல பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிவி சிந்து - சீனாவைச் சேர்ந்த ஹி பி ஜியா ஆகியோர் மோதினர். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டை 21-13 என்ற எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர்.

பிவி சிந்து புள்ளிகளில் முன்னிலை பெற்றாலும் நெருங்கி நெருங்கி வந்தார் ஹி பி ஜியா. இதனால் இரண்டாவது செட் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் அற்புதமாக விளையாடிய பிவி சிந்து 21 - 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து இம்முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டியில் சிந்து தோல்வியடைந்ததால் நிலையில் அரையிறுதியில் தோல்வியடைந்தாதால், இப்போது வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

Related Stories: