×

இந்தியாவில் மறைக்கப்படுகிறதா கொரோனா தொற்று எண்ணிக்கை?.. ஐசிஎம்ஆர் ஆய்வை சுட்டிக்காட்டி மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் லகாரியா விமர்சனம்

டெல்லி: இந்தியாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கணக்கில் காட்டப்பட்டால் 30 பேரின் பாதிப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வை சுட்டிக்காட்டி பிரபல மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் லகாரியா விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவிற்கு பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு குறித்து ஐசிஎம்ஆர் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படியில் 67.6% இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது 90 முதல் 95 கோடி பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

இவர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நீங்கலாக பெரும்பான்மையானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் மூலமாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும் என மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் லகாரியா தெரிவித்துள்ளார். ஐசிஎம்ஆர்  ஆய்வு அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என கணக்கு தெரிவித்தால் 30 பேருக்கு தொற்று இருப்பது தெரியாமல் போயிருக்கும் அல்லது கணக்கில் காட்டப்படாமல் போயிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 99 பேருக்கு கொரோனா ஏற்பட்டால் ஒருவர் மட்டுமே கணக்கில் சேர்க்கப்பட்டு 98 பேரின் தொற்று மறைக்கப்பட்டுள்ளதாகவும்,

குறைந்தபட்சமாக கேரளாவில் 1-க்கு 6 என்ற கணக்கில் கொரோனா தொற்று கணக்கில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளதாகவும், சந்திரகாந்த் லகாரியா தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம் 1-க்கு 83, ஜார்கண்டில் 1-க்கு 63 என்ற கணக்கிலும் கொரோனா தொற்று மறைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜஸ்தானில் 1-க்கு 62, குஜராத் - 1-க்கு 61 என்ற கணக்கிலும் கொரோனா தொற்று  விடுபட்டிருக்கலாம் அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்திரகாந்த் லகாரியா கூறியுள்ளார்.


Tags : India ,Chandrakant Lagaria ,ICMR , Is the number of corona infections hidden in India?
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...