4 தங்கம் உள்பட 7 பதக்கங்கள்.. அதிக ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை அள்ளிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பதிவு செய்தார் எம்மா..!

டோக்கியோ: ஒலிம்பிக்ஸில் 7 பதக்கங்களை கைப்பற்றி ஆஸ்திரேலிய வீராங்கனை சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக கடந்த 23-ம் தேதி தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா மெக்கியான் 4x100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ பட்டர்ஃப்ளை, 100மீ பேக்ஸ்ட்ரோக், 4x200மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ ஃப்ரீஸ்டைல், 200மீ பேக்ஸ்ட்ரோக், மிக்ஸ்டு 4x100மீ மிட்லே ரிலே ஆகியப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இன்று பெண்களுக்கான 4x400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என 7 பதக்கங்கள் வென்றுள்ளார் எம்மா.

முன்னதாக நடைபெற்ற ஆட்டங்களில் 1952-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஓட்டோ ஒரே ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் வென்றது சாதனையாக இருந்தது. அதை 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் நடேலி காங்லின் 6 பதக்கங்கள் வென்று சமன் செய்திருந்தார். தற்போது எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் பெற்று அதிக ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை அள்ளிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பதிவு செய்தார் எம்மா.

Related Stories: