கொள்ளையன் அடித்து கொலை

வேளச்சேரி: வேளச்சேரி ராஜலட்சுமி நகர் 6வது மற்றும் 7வது தெருக்களில் உள்ள 5 வீடுகளின் பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கடந்த வாரம் திருடுபோனது. போலீசார் விசாரணையில், சேலையூர் காமராஜபுரத்தை சேர்ந்த ஓட்டை தினேஷ் (35) திருட்டில் ஈடுபட்டதும், அவர், கடந்த 2 தினங்களுக்கு முன் செங்கல்பட்டில்  உறவினருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, திருடப்பட்ட லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ஓட்டை தினேசின் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>