ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வில் மாணவர்களின் முடிவெடுக்கும் தன்மை, சாதுர்யம் சோதிக்கப்படுகிறது: சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி ஆணையர் பேச்சு

சென்னை: இந்திய குடிமைப் பணி தேர்வின் நேர்முக தேர்வு வழிகாட்டுதலுக்கான புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடந்தது. இதை”நேர்காணல்களின் மறு வரையறை” என்ற தலைப்பில் ஐஏஎஸ் அதிகாரியும், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சி ஆணையருமான எம்.கே.சண்முகசுந்தரம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பிரதியை  100 சதவீதம் பார்வை குறைபாட்டுடன் குடிமைப் பணி தேர்வு எழுதி ஐஆர்எஸ் அதிகாரியாக இந்திய வணிக பணியில் பணியாற்றி வரும் பூரணசுந்தரி பெற்றுக்கொண்டார்.

விழாவில் சண்முகசுந்தரம் பேசுகையில், ”பொதுவாக குடிமைப் பணி தேர்வுக்கான நேர்காணலில் மாணவர்களின் அணுகுமுறை முடிவெடுக்கும் தன்மை, சாதுர்யம், செயல்திறன் ஆகியவையும் சோதிக்கப்படுகிறது. நேர்காணல் செய்யும் குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக பல்வேறு பின்னணியிலிருந்தும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். கிராமப்புற பின்னணி கொண்ட மாணவர்கள், எளிய பின்புலம் கொண்ட மாணவர்கள் ஆகியோர் பயன்பெறும் விதமாக இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் நேர்முக தேர்வை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்கான நடைமுறை ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளது” என்றார். விழாவில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை பயிற்றுனர் சந்துரு,அகாடமி  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: