தமிழகத்தில் 1,986 பேர் பாதிப்பு 23 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: சென்னையில் பாதிப்பு குறைவு

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 1,60,897 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,178 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேர் நேற்று உயிரிழந்தனர். சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கோவையில் 28ம் தேதி 179 ஆக இருந்த பாதிப்பு 29ம் தேதி 188, 30ம் தேதி 230, நேற்று 246 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டில் 28ம் தேதி 140 ஆக இருந்த நிலையில் 29ம் தேதி 166 பேர், 30ம் தேதி 171 பேர், நேற்று 165 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று முன்தினம் 109 பேராக இருந்த நிலையில், நேற்று 122 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சாவூரில் 29ம் தேதி 102ல் இருந்து  30ம் தேதி 105 ஆகவும், நேற்று 124 ஆகவும் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை 100க்கு கீழ் உள்ளது. 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஜூலை 1ம் தேதி 90031 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 93689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு மாதத்தில் 3,658 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>