தங்கம் சவரனுக்கு திடீரென ரூ.168 குறைந்தது

சென்னை: தங்கம் விலை ஒரு நிலை இல்லாமல் ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறது. சில நாட்களில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. கடந்த 28ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,056க்கும், 29ம் தேதி சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,328க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம்(30ம் தேதி) கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,569க்கும், சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,552க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.536 அதிகரித்தது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய வைத்தது.

அதே நேரத்தில் இன்னும் விலை அதிகரிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.4,548க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.36,384க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை குறைந்திருப்பது, நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். நாளை தங்கம் மார்க்கெட் தொடங்கிய பின்னரே விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும்.

Related Stories: