சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் அய்யனார்(40). இவரது பட்டாசு ஆலை சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரத்தில் உள்ளது. இங்கு 8 அறைகள் உள்ளன. நேற்று காலை தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது மருந்து கலவை அறையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் (60) என்ற தொழிலாளி உடல் சிதறி பலியானார். அந்த கட்டிடம் தரைமட்டமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். மரக்கிளையில் தொங்கிய உடல்பாகங்களை மீட்டனர். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>