கோழிப்பண்ணை உரிமையாளர் கொலையில் தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவர் உட்பட இருவர் கைது

நெல்லை: கோழிப்பண்ணை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் கோழிப் பண்ணை உரிமையாளர் அஜித் (28). இவர், கடந்த பிப்.13ல் மானூர் அருகே காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மானூர் போலீசார் விசாரணை நடத்திய போது நிலத்தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரிய வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் கண்ணபிரானின் மனைவிக்கு நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தில் வளைகாப்பு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு  வந்தால் அவரை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இந்நிலையில் தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்திற்கு நேற்று அதிகாலை மனைவியை பார்க்க வந்த கண்ணபிரான், அவரது கூட்டாளி வாகைகுளத்தை சேர்ந்த பன்னீர்பாஸ் (29) ஆகிய இருவரை நெல்லை மாநகர தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Related Stories: