ஏழுமலையான் கோயிலில் 6 ஊழியர்கள் பணி நீக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2006-2008ம் ஆண்டுக்கு இடையே வெவ்வேறு அடையாள அட்டை பயன்படுத்தி ஆர்ஜித சேவை டிக்கெட்டு பெற முன்பதிவு செய்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் முறைகேடு உறுதியானது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்கள் சூர்யநாராயணா, சோடா மதுசூதனன், மூத்த உதவியாளர்கள் பாலகிருஷ்ணா, ஹேமாதர், இளநிலை உதவியாளர் நாராயண ராஜு,  சீனிவாசுலு ஆகிய 6 ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து செயல் அதிகாரி ஜவகர் நேற்று உத்தரவிட்டார். மேலும் 4 ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.

Related Stories: