காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பிடிஓக்கள் பணியிடமாற்றம்: கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பி.டி.ஓக்களை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்து சுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் (வ.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சம்பத், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராகவும், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி (வ.ஊ) அலுவலர் தினகரன், மாவட்ட ஆட்சியரக உள்ளாட்சி தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், உள்ளாட்சி தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராக மாற்றப்பட்டுள்ளனர்.

குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சீனிவாசன், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி (வ.ஊ) அலுவலராகவும், காஞ்சிபுரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், உதவி இயக்குனர் அலுவலக (தணிக்கை) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், உதவி இயக்குனர் அலுவலக தணிக்கை பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சி தலைமை மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பபட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர வளர்ச்சிப் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், மாவட்ட ஆட்சியரக சிறுசேமிப்பு பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மாவட்ட ஆட்சியரக வட்டார வளர்ச்சி அலுவலர் (சிறுசேமிப்பு) பாலாஜி, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி (வ.ஊ) அலுவலராகவும், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி (வ.ஊ) அலுவலர் தங்கராஜன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் சலீம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>