கரூர் டிஎன்பிஎல் ஆலைக்கு நிலக்கரி வாங்குவதில் முறைகேடு 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கரூர்: கரூர் புகளூரில் டிஎன்பிஎல் ஆலை செயல்பட்டு வருகிறது. டிஎன்பிஎல் ஆலைக்கு நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது சம்பந்தமாக முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து, டிஎன்பிஎல் ஆலை நிர்வாகம் கடந்த 2 நாட்களாக ரகசிய விசாரணை நடத்தியதில், நிலக்கரி வாங்கியதில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட டிஎன்பிஎல் ஆலையின் வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல் முதன்மை பொது மேலாளர் பாலசுப்ரமணி, ஆய்வுக்கூடம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து செயல் இயக்குனர் கிருஷ்ணன் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலசுப்ரமணி நேற்று ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: