திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆவடி நாசர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (1ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காக்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹவுஸில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில மாணவரணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் மா.ராஜி, ஜி.ஆர்.திருமாலை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றுகிறார். எனவே கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>