தொற்று பரவல் எதிரொலி: சென்னைக்குட்பட்ட இடங்களில் போலீசார் குவிப்பு: மாநகராட்சி எச்சரிக்கை !

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள ஓட்டல்கள் 50% இருக்கைகளில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இன்று முதல் மார்க்கெட்டுகள், கடை வீதிகள் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றன.

மேலும், தடை விதிக்கப்பட்டுள்ள 9 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டத்தையும், கடைகளில் கூட்டத்தையும் கண்காணிக்கிறார்கள். தொற்று பரவாமல் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கத் தொடங்கி உள்ளது. நெரிசல் மிகுந்த கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.

சானிடைசர், அனைத்து கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்கிறார்கள். ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி அளவுக்கு அதிகமான கூட்டத்தை கூட்டும் கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: