கொரோனா பரவல் எதிரொலி: தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதிப்பு !

சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களில் வரும் 9ம் தேதி வரையில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா தொற்று வரும் 9ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் என குறிப்பிட்ட ஒன்பது இடங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து சென்னை, மதுரை, பழனி  உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகம் 3-வது கோவிட் அலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இதனையடுத்து மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,மதுரை மீனாட்சி அம்மன்கோவில்,அழகர்கோவில், பழமுதிர்சோலை, ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 2ம் தேதி முதல் 9 ம் தேதி வரையில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் வட பழனி முருகன் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, ஆகமவிதிபடி, கால பக்தர்கள் இன்றி கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: