கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் இயக்குனர் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். அதேபோல், நாளை முதல் வரும் 3ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். வரும் 3ம் தேதி வரை அரபிக் கடல் பகுதிகளான கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என கூறியுள்ளது.

Related Stories: