தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோளிங்கரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பத்திரப்பதிவு துறையில் சார் பதிவாளராக இருக்கிறார். இரண்டாம் நிலை சார்பதிவாளராக இருந்த அவர் துறை சார்ந்த தேர்வுகள் மூலமாக முதல்நிலை பதிவாளராக நியமிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால் கல்வித்தகுதி அடிப்படையில் முதுநிலை படிப்பை தொலைத்தூர கல்வி மூலம் படித்துள்ளார்.

எனவே அதன் அடிப்படையில் அவருக்கு பதவி உயர்வு வழங்க முடியாது என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். முதல்நிலை சார் பதிவாளராக பதவி வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனுவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். இதில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய பணி நியமனத்திற்கு தான் தொலைத்தூர கல்வியை எடுத்து கொள்ளலாம் என்றும் அதுமட்டுமில்லாமல் மனுதாரரை பொறுத்தவரை எஸ்டி/எஸ்சி பிரிவில் 12ஆம் வகுப்பு தகுதியில் முதல்நிலை பதிவாளராக தேர்வாகி இருக்கிறார். தற்போது இரண்டாம் நிலை பதிவாளராக வேண்டும் என்றால் கல்லூரியில் மூண்டாண்டுகள் படித்திருக்க வேண்டிய அடிப்படை தகுதி இருக்கிறது. அதை புறந்தள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியத்தின் அடிப்படையில் அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

Related Stories: