வேர்க்கடலை அவகடோ சாலட்

செய்முறை

Advertising
Advertising

ஒரு அகலமான பாத்திரத்தில், வேர்க்கடலை, சிறு துண்டுகளாக நறுக்கிய அவகடோ பழம், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பெங்களூர் தக்காளி, துருவிய  கேரட், சீரகம், நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சை சாற்றைச் சேர்த்து ஒன்றாகப் பிரட்டவும். சுவையான  சாலட் தயார்.

குறிப்பு: அவகடோ பழத்தின் தோல் பிரவுன் நிறத்தில் இருந்தால் தான் பழம் பழுத்தது என்று அர்த்தம். சின்ன வெங்காயத்தை வதக்கியும் சாலட்டில் சேர்க்கலாம்.