கொரோனா மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் இன்று முதல் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் இயங்க தடை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை அங்காடிகள் செயல்பட அனுமதியில்லை. தமிழகத்தின் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை. புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் - காமாட்சி அம்மன் கோயில் வரை கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிகநகர் சந்திப்பு வரை கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கொத்தவால்சாவடி சந்தை நாளை முதல் 9ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

Related Stories: