அச்சுறுத்தும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 19.79 கோடியை தாண்டியது: 42.23 லட்சம் பேர் உயிரிழப்பு!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,223,477 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 197,966,640 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 178,883,251 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 87,562 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தற்போது 14,859,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 99,470 பேருக்கும், இந்தியாவில் 41,499 பேருக்கும், இந்தோனேசியாவில் 41,168 பேருக்கும், பிரேசிலில் 40,904 பேருக்கும், இங்கிலாந்தில் 29,622 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தோனேசியாவில் 1,759 பேரும், பிரேசிலில் 886 பேரும், ரஷியாவில் 794 பேரும், இந்தியாவில் 598 பேரும், அர்ஜெண்டினாவில் 473 பேரும், அமெரிக்காவில் 419 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: