தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் 3 நாட்களில் ரூ.536 அதிகரிப்பு நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை:தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் வருகிறது. கடந்த 26ம் தேதி ஒரு சவரன் ரூ.36,200க்கும், 27ம் தேதி ரூ.36,016க்கும் விற்கப்பட்டது. 28ம் தேதி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,507க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,056க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,541க்கும், சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,328க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக நேற்று காலையும் தங்கம் விலை அதிகரித்தது.

கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,562க்கும், சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,496க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,569க்கும், சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,552க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.536 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மீண்டும் சவரன் 37 ஆயிரத்தை தொட்டு விடுமோ? என்ற அச்சமும் நகை வாங்குவோரிடையே நிலவி வருகிறது. அதே நேரத்தில் இன்னும் விலை அதிகரிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>