இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு எச்1-பி விசா பெறுவதற்கு அமெரிக்கா 2வது லாட்டரி

வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனங்கள், சிறப்பு தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த எச்1-பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 65,000 பேருக்கு இந்த விசா வழங்க அமெரிக்க அரசின் சட்டம் வகை செய்கிறது.  இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியமர்வு சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், `2022ம் நிதியாண்டில் போதுமான எச்1-பி விசா எண்ணிக்கையை இன்னும் அடையவில்லை. எனவே, மேற்கொண்டு சிலருக்கு இந்த விசா வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக ஏற்கனவே ஜூலை 28ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து சிலர் ரேண்டம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளைக் கொண்ட தனிநபர்கள் தேர்வு அறிவிப்பில் சேர்க்கப்பட அவர்களின் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியமர்வு சேவைகள் கணக்குகள் புதுப்பிக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஐடி துறையினருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.

Related Stories:

>