இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாக். கண்டனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெக்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இந்த தேர்தல் நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. வெளியுறவுத் துறை செயலாளர் அரிந்தம் பாக்சி அளித்த பேட்டியில், ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு பாகிஸ்தான் தேர்தல் நடத்துவது ஏமாற்று வேலை,’ என்று காட்டமாக கூறினார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை நேற்று நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் இந்த எதிர்ப்பையும், கருத்தையும் நிராகரிப்பதாக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

மேலும், ‘இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான ஜம்மு காஷ்மீர் பிரச்னை, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 1948ல் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவிலான பிரச்னையாகவும் இருந்து வருகிறது. ஆனால், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி, ஜம்மு காஷ்மீரின் வரைபடத்தை இந்தியா தன்னிச்சையாக மாற்ற முயற்சி செய்து வருகிறது,’ என்றும் அது தெரிவித்துள்ளது.

Related Stories:

>