நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த வங்கி கூட இல்லை: ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: நாட்டில் 63 மாவட்டங்கள் இன்னும் ஒரு ரத்த வங்கி கூட இல்லாமல் இருக்கின்றன. நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 718 மாவட்டங்கள் உள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் 63 மாவட்டங்களில் அரசின் உரிமம் பெற்ற ஒரு ரத்த வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று அளித்த பதிலில், ‘தேசிய ரத்த கொள்கையின்படி, எல்லா மாவட்டங்களிலும் உரிமம் பெற்ற தலா ஒரு ரத்த வங்கி செயல்பட வேண்டும் என்பது இலக்காக உள்ளது. பெரிய நகரங்கள், சிறு நகரங்களில் அதிகளவில் ரத்த வங்கிகள் இருப்பதை விட, மாவட்டத்துக்கு ஒன்று இருக்க வேண்டும். இதன்படி, நாட்டில் இன்னும் 63 மாவட்டங்களில் அரசின் உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் ஒன்று கூட இல்லை. அதை அமைப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது,’ என கூறியுள்ளார்.

Related Stories: