×

காலிறுதியில் தீபிகா தோல்வி

மகளிர் வில்வித்தை தனிநபர் காலிறுதியில் களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி (இந்தியா) 0-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஆன் சானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். வில்வித்தையில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக விளங்கிய தீபிகா, காலிறுதியுடன் விடைபெற்றது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

* டோக்கியோ ஒலிம்பிக்சில் நடுவர்களின் பாரபட்சமான முடிவால் தான் தோற்க நேரிட்டதாக இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம் மேரி கோம் விரக்தியுடன் கூறியுள்ளார். ஒலிம்பிக் விதிகளின்படி நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கோ அல்லது மறுபரிசீலனை செய்யக் கேட்பதற்கோ வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Deepika , Olympics, quarterfinals, Deepika, defeat
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்